August 6, 2016

சர்வதேசத்தின் துணையுடன் போராளிகளை பரிசோதிக்க ஒன்றுதிரள வேண்டும்!

இறுதி யுத்ததின் போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மரணங்கள் தொடர்ந்துகொண்டுள்ளன.


இவ்விடயம் தொடர்பாக புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்வதற்கு ஒன்றுதிரண்டு குரல்கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலய வகுப்பறைக் கட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பாலசுப்பிரமணியம், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஆ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணசபையின் 22 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டடம் அமைக்கப்பட்டவுள்ளது.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“2009ஆம் ஆணடு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி கைது செய்யப்பட்டார் நீண்ட காலம் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு சிறிது காலத்துக்குள் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அந்த மரணத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும் பரிதாக்கப்படவில்லை.

ஆனால் அதற்குப் பின்பு முன்னனிப் போராளிகளாக இருந்து போராட்டத்தை வழிநடத்தி ஆயுதம் தூக்கி போராடி இறுதி யுத்தத்தில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் இன்று ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறந்து கொண்டு வருகிறார்கள்.

முன்னாள் போராளிகள் இறந்துகொண்டுவருவது ஒரு அரசியல பிரச்சினையாகுவதற்கு முன்னர் இதற்க தீர்வு காணப்பட வேண்டும் என இது தொடர்பாக அமைச்சர் சரத் அமுனுகம குறியுள்ளார்.

இறந்த போராளிகளின் சடலங்களை நாங்கள் ஆய்வுக்குட்படுத்த முடியாது. முன்னனிப் போராளிகளாக புனர்வாழ்வு பெற்றவர்களை சர்வதேசத்தின் உதவி கொண்டு அவர்களின் பரிசோதனை செய்ய வேண்டும் என நாங்கள் ஒன்று திரண்டு குரல்கொடுக்க வேண்டும்.

முன்னணிப் போராளிகள் மாத்திரமல்ல சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமது மக்களை கொத்துக் கொத்தாக கொன்று அழித்தது மட்டுமின்றி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிவதற்கு காரணமாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆட்சி நடத்திய அரசியல்வாதிகளையும் பாதுகாப்பு படையினரையும் நாங்கள் விசாரணைக்குட்படுத்த வேண்டும்.

போர்க்கால குற்றவாளிகளை கண்டுவிடிக்க நாங்கள் ஒன்றுதிரள வேண்டும்.

கடந்த 1977ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக வாழ்ந்ததினால் பல வியங்களைச் சாதித்துள்ளளோம்.

அந்த நிலைமை மீண்டும் வரவேண்டும் எங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை தீர்த்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

சிறுபான்மை இன அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவுக்குவந்து அந்த முடிவை மக்களுக்கு தெளிவுபடுத்தி எதிர்காலத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான ஒரு அத்திவாரமிடவேண்டும்.

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆயுத ரீதியாக போராடிய தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் துன்புறுத்தபட்டார்கள்.

2009க்கு பிற்பட்ட காலத்தில் சிங்கள ராவய மற்றும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களினால் முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அர்களது பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன மதம் சார்ந்த உடையுடன் பெண்கள்கூட நடமாட முடியாத நிலை இருந்தது.

இந்த நிலை மீண்டுமொருமுறை வராமல் இருக்க தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும். வடகிழக்கிலே பெரும்பான்மையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டால் வடகிழக்கு எமது பூர்வீக தாயகம் இது இணைக்கப்பட வேண்டும். இணைந்த மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் அபிவிருத்தி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment