August 17, 2016

திருக்கேதீஸ்வரம் பகுதியில் இரகசியமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை அமைந்துள்ள பகுதியில் எனது சொந்த உறுதிக்காணி உள்ளது அதனை மீட்டுத்தாருங்கள்!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இரகசியமாக அமைக்கப்பட்ட புத்த விகாரை அமைந்துள்ள பகுதியில் எனது சொந்த உறுதிக்காணி உள்ளது அதனை மீட்டுத்தாருங்கள் என காணி உரிமையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

மன்னார் திருக்கேதீஸ்வரம் சூழலில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த மதத்தினைப் பின்பற்றுபவர்களோ யாரும் அற்ற பிரதேசத்தில் தமிழ் மக்கள் பரம்பரையாக கொண்ட பகுதியை ஆக்கிரமித்து ஓர் பிறமான்ட பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் விகாரை தொடர்பில் ஆரம்பத்தில் எதிர்ப்புக் கிளம்பியதனையடுத்து குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும் இரகசியமான முறையில் குறித்த பணிகள் இடம்பெற்று சைவ மக்களின் முக்கியநாளான கடந்த சிவராத்ரிரி தினத்தன்று இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்காக 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் உறுதியை உடைய 10 பரப்புக் காணியின் உரிமையாளரே தனது காணியை மீட்டுத்தருமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினரை நாடியுள்ளார்.

குறத்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

திருக்கேதீஸ்வரம் பகுதியில் 10 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு பௌத்தரே அல்லாத இடத்தில் ஓர் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தின் நில உரிமையாளர்கள் பலர் என்னை நாடி தமது நிலத்தை மீட்டுத்தருமாறு கோரினார். தாம் நீன்ட காலமாக அப்பகுதியில் வசித்தமைக்கான சான்றுகளையும் சமர்ப்பித்தனர்.

இவற்றிற்கு அப்பால் அப்பகுதி நிலத்தின் உறுதியும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இவ் விடயத்தினை நான் நாடாளுமன்றத்தில் கேள்வியாக விஜயதாச ராயபக்சாவிடம் தொடுத்துள்ளேன்.

இதற்கான பூரண விளக்கத்துடன் பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் கோரினார். அதில் இருவர் கால அவகாசமே நிறைவு பெற்றுள்ளது. அதனால் எதிர் வரும் மாதம் இவ்விடயம் நாடாளுமன்றில் எதிரொலிக்கும். என்றார்.

No comments:

Post a Comment