பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களது புகைப்படங்கள் இரண்டு தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கேகாலையில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து வர்த்தகரின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கப்பம் கோரியவர்கள் இவர்களே என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை வர்த்தகரின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பிரதமருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment