August 22, 2016

திடீர் என தரை இறக்கப்பட்ட உலங்கு வானூர்தியால் மடுவில் பதற்ற நிலை!

மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்று மதியம் தரை இறங்க வேண்டிய அமைச்சர் உட்பட பிரமுகர்கள் உள்ளடங்கிய உலங்கு வானூர்தியானது விமானியின் கவனயீனம் காரணமாக மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் தரையிறக்கப்பட்டது.


இதனால் மன்னார் மடுமாதா சிறிய குருமட பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்படதாக தெரிய வருகின்றது.

அங்கே ஏற்பட்ட பதற்ற நிலையினை தொடர்ந்து குறித்த உலங்கு வானூர்தியின் விமானி குறித்த வானூர்தியை மீண்டும் மன்னார் பொது விளையாட்டரங்கில் தரையிறக்கியுள்ளார்.குறித்த வானூர்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தரையிறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர் ஒருவர் உட்பட பிரமுகர்கள் பயணித்த குறித்த வானூர்தி மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தில் விமானியின் தவறுதல் காரணமாக தரை இறக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.இதனால் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து சென்று மேலதிக நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தனர்.குறித்த உலங்கு வானூர்தியில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் அரபி நாட்டவர்கள் பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் சவுதி நாட்டு தனவந்தர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று வன்னி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது குறித்த வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்கிய சவுதி நாட்டின் தனவந்தர்கள் கலந்து கொண்டு குறித்த 50 வீடுகளையும் திறந்து வைத்துள்ளனர்.

பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதிய போசனத்திற்காக சென்ற போது குறித்த வானூர்தி மடுமாதா சிறிய குரு மட வளாகத்தில் தறையிரக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாகவே அங்கு சற்று அச்ச நிலை ஏற்பட்டது.

எனினும் விடத்தல் தீவு கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த 50 வீட்டுத்திட்டம் மறைமுகமான முறையில் திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டமை மற்றும் குறித்த வானூர்தி தரையிரக்கப்பட்டமை குறித்து உண்மையை அறிந்து கொள்ள அமைச்சர் றிஸாட் பதியுதீனை பல முறை தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment