August 13, 2016

மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பில் சர்வதேச பங்களிப்பும் அவசியம்! - நோர்வே பிரதமரிடம் சம்பந்தன் !

மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என நோர்வே பிரதமரிடம் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், குறித்த செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.


 
இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பு இன்று கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றினை பெறுவது மிகவும் அத்தியாவசியம் என எதிர்க்கட்சிதலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளில் நோர்வேயின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment