August 19, 2016

அரச அனுமதியுடன் கொக்கிளாயில் விகாரை! திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையா?

கொக்கிளாயில் பிரதேச செயலகத்தின் அனுமதியுடனேயே விகாரை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திபிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

குறித்த பகுதியில் விகாரை அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது. இந்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் தனக்கு நன்றாகவே தெரியும், அது தொடர்பில் நான் தேடி பார்த்தேன்.

மேலும், பிரதேச செயலகத்தின் அனுமதியுடனேயே குறித்த விகாரை அமைக்கப்படுகிறது. இது தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் காணப்படுகின்றன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தகவல்களும் தன்னிடம் இருக்கின்றன.

குறித்த விகாரைக்கு அண்மித்த பகுதியில் சுமார் 250 சிங்கள மீனவ குடும்பங்கள் இருக்கின்றன. எனவே, அவர்களின் மத உரிமையை மதிக்க வேண்டும்.

அத்துடன், வட மாகாணத்தில் மொத்தமாக 13 பௌத்த விகாரைகளே காணப்படுகின்றன. எனினும், வட மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான இந்து கோவில்கள் காணப்படுகின்றன. பல கிறிஸ்தவ தேவாலயங்களும் காணப்படுகின்றன

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். கவலையடைய வேண்டிய தேவை கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment