கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாச்சார பிரிவினரால் ஆறு மாதங்கள் கொண்ட முழுநேர பயிற்சி நெறியாக குறும்படம் மற்றும் புகைப்பட பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (15) காலை கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர் கு. ரஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி நெறிக்கு முழுநேர பயிற்சிக்கு இருபது மாணவர்களும் பகுதிநேர பயிற்சிக்கு இருபது மாணவர்களும் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த பயிற்சி நெறி முற்றிலும் இலவசமாக ஆறு மாத கால இடைவெளி கொண்டதாக இந்திய மற்றும் உள்ளுர் பயிற்சியாளர்களினால் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.வட மாகாணத்தில் ஒரு பிரதேச செயலகத்தில் இவ்வாறான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான முழுமையாக நிதியினை வேல்ட் விசன் நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன் காவேரி கலாமன்றமும் இதற்கான அனுசரனையை வழங்கியுள்ளனர்.
ஆரம்ப நிகழ்வில் கரைச்சி பிரதேச உதவி பிரதேச செயலர் சிவகாமி, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அருட்செல்வன், வேல்ட்விசன் நிறுவன அதிகாரி, மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment