August 31, 2016

இலங்கையில் 25 ஆயிரம் தமிழர்கள் மாயம்: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்!

இனப்படுகொலை குறித்து இலங்கை இடம்பெறாத வகையில் சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்டு 30-ந்தேதி ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டாக உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின்போது ஏறத்தாழ 25 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

இவர்களில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் அடங்குவார்கள்.

போர் முடிந்து 6 முதல் 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும், காணாமல் போனவர்கள் பற்றி சிங்கள அரசு அக்கறை காட்டவில்லை.

இந்தநிலையில், காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பை இலங்கையிடம் ஒப்படைப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.

எனவே, காணாமல் போனோர் தினத்தை அறிவித்துள்ள ஐ.நா., இலங்கை இடம்பெறாத வகையில் சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இனப்படுகொலை குறித்து இலங்கை இடம்பெறாத சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று தமிழ் சமூகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. இது தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment