July 20, 2016

யாழ் பல்கலைக்கழக சிசிதரன் தாக்குதலுடன் தொடர்பற்றவர் -பொ. கஜேந்திரகுமார்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத் தலைவர் ரி.சிசிதரன், சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட ஒருவரென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
பல்கலைக்கழகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரகாரம் அவர் அமைதியான சூழலொன்றை ஏற்படுத்த பாடுபட்டவரெனவும் அவர் மீது திட்டமிட்டு இராணுவப்புலனாய்வின் பின்னணியில் கைது முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதாவெனவும் அவர் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே நீதிமன்றில் சரணடைந்த ரி.சிசிதரனை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று புதன்கிழமை (20) அனுமதியளித்தார்.
அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். மேற்படி சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், மாணவன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர் ஒன்றியத் தலைவரை செவ்வாய்க்கிழமை (19) கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர். இந்நிலையில் மாணவன் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையில், பிணை விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment