July 3, 2016

மக்கள் பிரதிநிதிகள், மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும் -விஜயகலா!

மக்கள் பிரதிநிதிகள், மக்களின் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற, கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
‘தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு வருகை தருமாறு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்று சமூகமளித்திருக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள், மக்களின் நலன் சார்ந்து செயற்பட வேண்டும்.’ என்றும் கூறினார்.

No comments:

Post a Comment