“கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வர்த்தகச் சந்தை இன்னும் இயங்காதிருப்பது ஏன்? சந்தைத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமைடைந்திருக்கின்ற போதும் அதனை இயங்க வைப்பதற்கு சம்மந்தப்பட்ட தரப்புகள் இன்னும் முயற்சி எடுக்கவில்லை.
வடபகுதி விவசாயிகளின் நலன் கருதி பல லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சந்தை பயனற்று மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்தச் சந்தையைத் திறந்து இயங்க வைக்காத நிலையில் வவுனியாவில் புதிய வர்த்தக வளாகத்தை எந்தப் பகுதியில் அமைப்பது என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.
இது வேடிக்கையானது“ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் –
கிளிநொச்சி நகரில் உள்ள அம்பாள்குளம் பகுதியில் வணிகச் சந்தை ஒன்று 2011 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பொருளாதார நிபுணர்கள், விவசாய அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வேண்டுகோளின் அடிப்படையில் மத்திய அரசின் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தச் சந்தை அமைக்கப்பட்டது.
ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் மொத்த விற்பனை நிலையமாக உருவாக்கப்பட்ட இந்தச் சந்தையின் நிர்மாணப்பணிகள் 2013 இல் ஆரம்பிக்கப்பட்டு 2015 இல் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து இந்தச் சந்தையைத் திறந்து இயங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் இந்தச் சந்தை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இந்தச் சந்தை இயங்கும் என்ற எதிர்பார்ப்போடு விவசாயிகளும் வர்த்தகர்களும் பெரும் ஆவலோடிருக்கின்றனர். இந்தச் சந்தை இயங்கும்போது பலருக்கான வேலை வாய்ப்பும் வருவாயும் கிட்டும். இதைக்குறித்து சம்மந்தப்பட்ட தரப்புகளாகிய மத்திய அரசும் மாகாணசபையும் கவனம் கொள்ளாமலிருக்கின்றன.
பதிலாக இப்பொழுது வவுனியாவில் ஒரு வணிக வளாகத்தை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதை ஓமந்தையில் அமைப்பதா, தாண்டிகுளத்தில் அமைப்பதா என இரண்டு தரப்புகள் எதிரும் புதிருமாக வாதிட்டு வருகின்றன. வவுனியாவில் ஒரு வர்த்தக வளாகம் அமையவிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.
அதை நாம் வரவேற்போம். அதேவேளை ஏற்கனவே கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வர்த்தகச் சந்தையை திறக்காதிருப்பது ஏன்?
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி உள்ளடங்கலாக வடபகுதி உற்பத்தியாளர்கள் தமது பொருட்களைச் சந்தைப்படுத்துவற்கு கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த பொதுச்சந்தை வளாகத்தைப் பயன்படுத்தினர். அப்பொழுது தென்பகுதியிலிருந்து பெருந்தொகையான வர்த்தகர்கள் கிளிநொச்சிக்கு வந்து பொருட்களை விற்றும் கொள்வனவு செய்தும் சென்றனர்.
யுத்தத்தின் விளைவாக இந்த வர்த்தக நடவடிக்கை முடங்கியது. இதனையடுத்து, தம்புள்ள என்ற இடத்தில் இத்தகைய ஒரு சந்தை உருவாகியது. யுத்தம் முடிந்த பின்னர் கிளிநொச்சி வர்த்தகச் சந்தையை மீள ஆரம்பிப்பதற்கான கோரிக்கையை பொருளாதார நிபுணர்களும் விவசாயிகளின் அமைப்புகளும் வர்த்தகர் சங்கத்தினரும் கூட்டாக விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி வர்த்தகச் சந்தை என மொத்த விற்பனை நிலையம் உருவாக்கப்பட்டது. குறைநிரப்பு நிதியை மாவட்டச் செயலகம் வழங்கி இப்பொழுது முழுமையான அளவில் நிர்மாணப்பணிகள் முடைவடைந்துள்ளன.
எனினும் சந்தை திறக்கப்படாதிருப்பது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பானது. இதைக் கவனத்திற் கொண்டு உரிய தரப்பினர் இந்தச் சந்தையை விரைவில் திறந்து இயங்க வைக்க வேண்டும்“ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment