ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் வாக்கெடுப்புக்கு எதிராக லண்டன் நகரில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் இருக்க வேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறிய பிரெக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பு கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். இருப்பினும், பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரு தரப்பு நிலைப்பாடுகளும் அங்கு நிலவி வந்தது.
பிரிட்டன் வெளியேறினால் சர்வதேச பொருளாதார சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் ஐரோப்பிய யூனியன் கொடியினையும், கோரிக்கை பலகைகளையும் தாங்கியவாறு சென்றனர்.
பேரணியின் போது, “நாம் என்ன செய்ய வேண்டும்? ஐரோப்பிய யூனியனிலே இருக்க வேண்டும்” என்று அவர் முழக்கமிட்டனர்.
வெஸ்ட் மினிஸ்டர் நகரத்தை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை இணையத்தள பிளாக் ஒன்றில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 60 பேர் ஐரோப்பிய யூனியனில் நீடித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment