July 4, 2016

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம், மைத்திரி, சட்டமா அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் இதனால், அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதியரசர்களை கொண்ட முழுமையான அமர்வின் முன் விசாரிப்பது என உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.


இந்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சட்டமா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பு தொடர்பான விளக்கத்தையும் மனுதாரர்கள் கோரியுள்ளதால், மனுவை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முழுமையான நீதியரசர்களை கொண்ட அமர்வின் முன் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், நீதியரசர் ஈவா.வனசுந்தர ஆகியோர் முன்னலையில் மனு இன்று ஆராயப்பட்டது.

களனி கல்பொரெல்ல வித்தானகே சஞ்ஜீவ சுதத் பெரேரா, பேலியகொடை பிரதீப் ஆசிரி செய்சா, களனி தோன் பிரேமரத்ன ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது உப பந்திக்கு அமைய தேசிய கீதத்தை சிங்கள வார்த்தைகளாலும் சிங்க மொழியில் மாத்திரமும் பாட வேண்டும் என அறிவிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment