July 31, 2016

பிரித்தானியாவில் சிக்கலாகும் சட்டம்…!

இங்கிலாந்தில் பிளாஸ்டிக் பை பாவனைக்கு எதிராக தண்டம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, தற்பொழுது அங்கு அதன் பாவனை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் பிளாஸ்டிக் பை பாவனைக்கு எதிரான தண்டம் அறவிடும் திட்டத்தின் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நாட்டில உள்ள ஏழு முக்கிய பல்பொருள் அங்காடிகளில் 640 மில்லியன் பிளாஸ்டிக் பைகளே பாவிக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த பல்பொருள் அங்காடிகளில் கடந்த 2014ஆம் ஆண்டில் மாத்திரம் 7.64 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் பாவிக்கப்பட்டுள்ளன. குறித்த முறைமை தொடர்ந்து கையாளப்பட்டு வரும் பட்சத்தில் இந்த வருடத்தில் அங்கு பிளாஸ்டிக் பைகளின் பாவனையை ஆறு பில்லியனை விடவும் குறைந்த தொகைக்கு கொண்டுவரலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளின் பாவனைக்கு எதிரான இந்த சட்டம் முதலில் 2011ஆம் ஆண்டு வேல்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வட அயர்லாந்திலும், 2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்திலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம், கடந்த வருடம் முழு இங்கிலாந்திலும் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment