சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதையடுத்து ராம்குமார் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை புறப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரிடம் சிக்கினார்.
அப்போது அவர் தனக்குத்தானே கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துக் கொண்டதால், அவருக்கு தென்காசி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படையினர் சென்னையில் இருந்து வந்து ராம்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மயக்க நிலையில் இருந்த ராம்குமார், சனிக்கிழமை இரவு இயல்பு நிலைக்குத் திரும்பிய வேளையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ராம்குமாரின் தாய் புஷ்பம் உடனிருந்து கவனித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் திரவ உணவு சாப்பிட்டார் ராம்குமார்.
மருத்துவர்கள் கூறுகையில்,
ராம்குமாரின் உடல் நலம் குறித்து ஏற்கெனவே பொலிஸாருக்கும், சுகாதாரத் துறைச் செயலருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சேருபவர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஆணை மிகவும் அவசியம். அந்த ஆணை கிடைத்தால்தான் அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியும்' என்றனர்.
அதன்பின்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். முதலில் நீதிபதியின் வீட்டுக்கு ராம்குமாரை அழைத்துச் சென்று ஆஜர்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த ஆலோசனை மாற்றப்பட்டது.
மருத்துவமனையிலேயே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்த பொலிஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.53 மணிக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமதாஸ் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார். ராம்குமார் சிகிச்சை பெற்ற அறைக்கு நீதித்துறை நடுவரை பொலிஸார் அழைத்துச் சென்றனர். அவர் முன்பு ராம்குமாரை ஆஜர்படுத்தினர்.
மேலும், சென்னைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் பொலிஸார் தெரிவித்தனர். ராம்குமாரின் மருத்துவப் பரிசோதனை குறிப்புகள், பொலிஸாரின் ஆவணங்களை சரிபார்த்த நீதித்துறை நடுவர், அவரை சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-14ல் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து 108 அம்புலன்ஸ் வாகனத்தில் இரு மருத்துவர்கள், ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே பொலிஸ் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நடித்துக் காட்ட வைக்க திட்டம்?
நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் குழுவுடன் அம்புலன்ஸ் வாகனத்தில் சென்னைக்கு வருகிறார் ராம்குமார். இவரை காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் ராம்குமார் தங்கிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்திய அறிவாலை விடுதியில் எங்கு வைத்திருந்தார், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு எப்படி எடுத்துச் சென்றார் என்று இதன் மூலம் தெளிவாக அறிய காவல்துறை விரும்புவதாக கூறப்படுகிறது.
மேலும் உடல்நிலை சரியானதும், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என அவனை நடித்துக் காட்ட வைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:
Post a Comment