July 27, 2016

கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து ஒரு பெண்!

1983ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றே. கறுப்பு ஜூலை என்றால் அனைவரது முகத்திலும் அச்சம், கவலை, கோபம் உச்சம் தொடும்.


தமிழர்களின் இந்த அழிவுக்காகவும், இதற்கார காரணம் என்னவென்றும், கணடாவை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வலர் Usha S. Sri-Skanda-Rajah என்பவரால் எழுதப்பட கட்டுரையே கறுப்பு ஜூலை.

இவர் தனது கட்டுரையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான படிவமாக எமது கைகளில் கொடுத்திருக்கின்றார். இனி அந்த கட்டுரையில் என்ன இருக்கின்றது என்பது பற்றி நோக்குவோம்,

“கறுப்பு ஜூலை என்றால் என்ன? தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட யுத்தமா? இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியதா? தமிழீழ விடுதலை புலிகளின் 13 படையினர்களை பதுங்கியிருந்து தாக்கிய நிகழ்வா? கறுப்ப ஜூலை இடம்பெறும் போது நான் எங்கு இருந்தேன்? இனவாதமற்ற தமிழீழத்தை உருவாக்க இயலுமா?

கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு இடம்பெற்றது. நன்கு நினைவு கூறுவோம் இனப்படுகொலை இடம் பெற்று இந்த வருடம் 33 ஆவது ஆண்டு பூர்தியாகும் என்பதை,

இனப்படுகொலைக்கு இலங்கையின் அரசியல்வாதி ஜே.ஆர்.ஜெயவர்தன பங்கேற்றமைக்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. பத்து நாட்களாக இடம் பெற்ற இந்த இன மோதலில் 3000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் வீடுகளையும், அவர்களது வணிக நிலையங்களையும் தீ வைத்து கொளுத்தினர். 150 ஆயிரம் தமிழ் மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாக நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கறுப்பு ஜூலை இடம் பெற்ற போது, நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என நான் தற்போது சிந்தித்து பார்கின்றேன் இந்த தாக்குதல் பதுங்கியிருந்தே நடத்தப்பட்டுள்ளது.

இதை நான் எழுத வேண்டியதற்கான தேவை...

இந்த தாக்குதலை எந்த தமிழராலுமே மறக்க முடியாது. இனவாத தாக்குதல் ஒரு படம் போல் கண்முன்னே தோன்றுகின்றதே, இதை எவ்வாறு மறக்க இயலும் இதே போல் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் இதன் போதே முள்ளிவாய்கால் பிரச்சினையும் இடம் பெற்றது.

கறுப்பு ஜூலை இடம் பெற்ற போது நான் எங்கு இருந்தேன்? இனவாதத்தை ஒழிக்க என்ன செய்திருக்கலாம்?

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலையின் துரதிஷ்ட நாளுக்கு மீண்டும் பின்னோக்கி செல்கின்றேன். நாங்கள் பிலிபைன்ஸ் மனிலா பகுதியில் 70 மற்றும் 80 களில் வாழ்ந்தோம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்களது வீட்டிற்கும் அத்துடன் லண்டனிற்கும் செல்ல தீர்மானித்தோம்.

எங்கள் முதல் அடியை கொழும்பில் எடுத்து வைத்ததுமே சில வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான வதந்திகளே அவை. எங்களுக்கு ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.




இதனால் நாங்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல தீர்மானித்தோம்.

ஆயினும் தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. பின் அச்சமடைந்த நாங்கள்,எனது உறிவினர்களுடன் மீண்டும் லண்டனிற்கு செல்லவே தீர்மானித்தோம், ஆனால் இது இடம் பெறவில்லை.

ஜூலை 23 ஆம் திகதி வந்தது. நாங்கள் பயந்தது போலவே இந்த சம்பவம் இடம் பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை ஆரம்பிக்க அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியது. யுத்தத்திற்கான ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன.

கறுப்பு ஜூலை ஒரு இனக்கலவரம் இல்லை. முதலில் சிந்திக்க வேண்டியவை. அரசாங்கம் இதை இனக்கலவரமாக கருதவில்லை. தமிழ் மக்களின் வலிகள் குறித்து வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் இது ஒரு இனக்கலவரம் இல்லை என பல உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களை துன்புறுத்துவதற்காக திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் மற்றும் தமிழ் இனத்தை அளிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதி திட்டம் இது ஒரு இனப்படுகொலையே என என்கார்டா அகராதியை வடிவமைத்த வட அமெரிக்க பிரஜை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பத்தகத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் E M Thornton மற்றும் R. Niththyananthan ஆகியோர் இனப்படுகொலை எள்றே எழுதியுள்ளனர்.

வரலாற்றில்1983 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் மக்கள் கறுப்பு இனத்தவர்களாகவே கருதப்பட்டனர்.

சிங்களவர்களின் ஆட்சியாகவே காணப்பட்டது. அப்போதிருந்த மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அஞ்சி அஞ்சியே வாழ்ந்தனர்.

தமிழ் மக்கள் கடும் துன்பங்களையே சந்தித்து வந்தனர். உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கூட இதனை மறக்க முடியாது.

எங்களுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எங்களால் நாடு திரும்ப முடியவில்லை.

எனக்கு ஏழு வயதாக இருந்த போது 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது நான் கொழும்பில் இருந்தேன், என் பெற்றோர்கள் குருநாகலில் இருந்தனர். நான் கதி கலங்கி போனேன். தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன.

சிங்கள குண்டர்களால் இரத்தம் உறைய தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

எனது கணவனின் குடும்பம், அவரது சகோதரன், இரண்டு சகோதரிகள் மற்றும் 90 தமிழ் மக்கள் தங்கியிருந்த முகாமும் தீ்க்கிரையாக்கப்பட்டன.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை இருந்தது மீண்டும் மனிலாவிற்கு சென்று, சர்வதேச சமூகத்திடம் எங்களது மக்களை காப்பாற்றுவதற்கான உதவிகளை கோறுவோம் என நினைத்திருந்தேன்.

பின் நான் மீண்டும் திரும்பினேன். என் கணவனும் நானும் இணைந்து ஒரு யோசனை முன்வைத்தோம், தங்களது உடமைகளை இழந்த எமது மக்களுக்கு உதவும் முகமாக புதிய ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க திட்டமிட்டோம்.

பின் பிலிபைன்ஸிலும் நாங்கள் சில நன்கொடைகளை கேட்டிருந்தோம் அவர்களும் தேவையான பொருட்களை வழங்கியிருந்தனர்.

பின் உதவுவதற்காக இலங்கையில் உள்ள அமைப்புகளுக்கு தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.ஆனால் அவர்கள் தமிழர் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டிருந்தனர்.

அதற்கு பதிலாக இலங்கையர் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்துங்கள் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அந்த கடிதத்தை அவர்கள் புறக்கணித்தனர் காரணம் நாங்கள் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு பட்டவர்கள் என கூறியிருந்தனர்.

சிங்களவர்களின் வன்முறையை அடுத்தே தமிழீழ விடுதலை புலிகள் உருவாகின.......

தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறை காரணமாகவே தமிழீழ விடுதலை புலிகள் என்ற அமைப்பு உருவாகியிருந்தது. பின்னர் சிங்களவர்கள் அரசாங்கத்தை உருவாக்கினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களை அழிக்கும் நோக்கிலேயே இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத அரசியல் சீர்திருத்த கொள்கையில் தமிழ் மக்கள் ஒப்பந்தம் இன்றி அவர்களின் உரிமைகளை பெற முடியாது என்ற ஒப்பந்தங்கள் கொண்டுவரப்பட்டன.

தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்தமையினாலேயே 1956 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் உருவாகின.

கல்வித்துறையிலும் ஈழ தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

கறுப்பு ஜூலை இடம் பெற்றமைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவே முழுக் காரணம். தமிழ் மக்கள் பட்டினி கிடந்தால் சிங்களவர்கள் சந்தோசமாக இருப்பார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதில் எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படும் அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் யாழ்ப்பாண மக்களின் கருத்துக்கள் குறித்து தற்போது கவலைப்படவில்லை. தற்போது அவற்றை பற்றி நாம் நினைக்கவே முடியாது.

தமிழர்கள் பல அழுத்தங்களை சந்தித்திருந்தால் சிங்களவர்கள் சந்தோசமாக தான் இருந்திருப்பார்கள்.

தமிழர்கள் பட்டினி கிடந்தால் சிங்களவர்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள் என ஜயவர்தன கூறியமை இன்னும் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கின்றது”.

என்று தனது அனுபவங்களையும் கறுப்பு ஜூலையின் கொடுமைகள் பற்றியும் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment