July 30, 2016

குமா­ர­புரம் படு­கொ­லையில் குற்­ற­வா­ளிகள் யார்?

திரு­கோ­ண­மலை – குமா­ர­புரம் படு­கொலை வழக்கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ஆறு இரா­ணுவ வீரர்­களும் அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்தில் நீதி­பதி மஞ்­சுள தில­க­ரட்ண தலை­மை­யி­லான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்­னி­லையில் நடை­பெற்ற இந்த விசா­ர­ணையின் முடி­வி­லேயே இந்தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

1996 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 11 ஆம் திகதி இந்தப் படு­கொலைச்­சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­­தது. இந்த சம்­ப­வத்தில் சிறு­வர்கள், பெண்கள், ஆண்கள் என 26 பேர் கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இதில் பாட­சாலை மாணவி ஒருவர் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­மோ­ச­மான முறையில் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்த சம்­ப­வத்தில் 38 பேர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர்.

திரு­கோ­ண­மலை – மட்­டக்­க­ளப்பு ஏ–15 நெடுஞ்­சா­லையில் கிளி­வெட்­டி­ கி­ரா­மத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ­மீற்றர் தொலைவில் வடக்­குப் ­பக்­க­மாக மூதூரை எல்­லைப்­ப­டுத்­தி­யி­ருக்கும் ஒரு குக்­கி­ரா­மமே குமா­ர­பு­ர­மாகும். 1981 ஆம் ஆண்­ட­ளவில் இக்­கி­ராமம் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அரு­ணாச்­சலம் தங்­கத்­து­ரையின் சகே­ாத­ர­ரான குமா­ர­து­ரை­யினால் உரு­வாக்­கப்­பட்­டது. இதில் 46 ஏழைக்­கு­டும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டி­ருந்­தன. மலை­ய­கத்தைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட இவர்கள் அயல் கிரா­மங்­களில் தொழில்­பு­ரிந்து வந்­தனர். சம்­பவம் இடம்­பெற்­ற­போது 74 குடும்­பங்கள் வரையில் இந்தக் கிரா­மத்தில் வசித்து வந்­துள்­ளன.

குமா­ர­பு­ரத்­திற்கு அரு­கே­யுள்ள கிளி­வெட்­டி­யி­லுள்ள இரா­ணுவ முகா­முக்கு தெஹி­வத்த இரா­ணுவ முகா­மி­லி­ருந்து உண­வு­ கொண்டு­வந்த இரா­ணு­வத்­தினர் இருவர் மீது ஆயு­த­தா­ரிகள் தாக்­குதல் நடத்­தி­யதில் அவர்கள் பலி­யா­கி­யி­ருந்­தனர். அதனையடுத்து குமார­புரம் கிரா­மத்­திற்குள் புகுந்த இரா­ணு­வத்­தினர் கண்­மூ­டித்­த­ன­மாக துப்பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­துடன், வெறி­யாட்டம் நடத்தி­யி­ருந்­தனர்.

இதன் கார­ண­மா­கவே அப்­பாவி பொதுமக்கள் 26 பேர் துடிதுடித்து பலி­யா­கி­ய­துடன் 38 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.சம்­ப­வத்தையடுத்து நடத்­தப்­பட்ட விசா­ர­ணையில் எட்டு இரா­ணு­வத்­தினர் கைதுசெய்­யப்­பட்­டி­ருந்­தனர். அப்­போ­தைய மூதூர் நீதி­பதி சுவர்­ண­ராஜா முன்­னி­லையில் இவர்கள் மீதான அடை­யாள அணி­வ­குப்பு நடத்­தப்­பட்­டது. இதன்­போது தெஹி­வத்த இரா­ணுவ முகாமைச் சேர்ந்த இந்த எட்டு இரா­ணு­வத்­தி­னரும் கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­னது உற­வி­னர்­க­ளினால் அடை­யாளம் காணப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து மூதூர் நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்­டது.

ஆரம்­பத்தில் மூதூர் நீதிவான் நீதி­மன்­றத்தில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. பின்பு திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டது.

எதி­ரிகளான இரா­ணுவ வீரர்­களின் பாது­காப்பு கருதி இந்த வழக்­கா­னது 2012 ஆம் ஆண்டு அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டது.
எட்டு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்ட போதிலும் அதில் இருவர் மர­ண­ம­டைந்­தி­ருந்­ததனால் ஆறு­பே­ருக்கு எதி­ராகவே வழக்கு இடம்­பெற்­றி­ருந்­தது. எதி­ரிகள் மீது தலா 101 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வழக்கு விசா­ரணை இடம்­பெற்­றது. சட்­டமா அதி­பரின் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வா­தி­க­ளான சுதர்­சன டி சில்வா, விராஜ் வீர­சூரிய ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். ஏழுபேர் கொண்ட ஜூரிகள் முன்­னி­லையில் இந்த விசா­ரணை நடை­பெற்­றது. படு­கொலை செய்­யப்­பட்ட 26 அப்­பா­வித்­த­மி­ழர்­களின் உற­வி­னர்­களின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­தரணி கே. ரட்­ணவேல் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இந்த வழக்கில் நீதி­மன்­றத்­தினால் 20 சாட்சி­க­ளுக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்ட போதிலும் நான்கு பேர் உயி­ரி­ழந்த கார­ணத்­தினால் 16 உற­வி­னர்­களே சாட்­சியம் அளித்­துள்­ளனர். வழக்கின் ஏனைய சாட்­சி­யா­ளர்­க­ளான பொலிஸ் அதி­கா­ரிகள், விசேட வைத்­திய நிபு­ணர்கள், வைத்­தி­யர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் என மொத்­த­மாக 107 பேர் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

வழக்கு விசா­ர­ணையின் போது அரச சட்­ட­வா­தி­யான சுதர்­சன டி சில்வா, 26 பொது­மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட இந்த சம்­ப­வ­மா­னது பார­தூ­ர­மான விட­ய­மாகும். சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் சந்தே­கத்­திற்­கி­ட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­தனால் இவர்கள் ஆறு ­பே­ருக்கும் மரண தண்­டனை வழங்­க­வேண்­டு­மென்றும் இந்த வழக்கு விசா­ர­ணையை தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் பலர் விசே­ட­மாக அவ­தா­னித்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனாலும் பிர­தி­வா­திகள் சார்பில் வாதிட்ட சட்­டத்­த­ர­ணிகள், பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நிரூ­பிக்க முறைப்­பாட்­டா­ளர்கள் தரப்பு தவ­றி­விட்­டது. சாட்­சி­யா­ளர்கள் சில­ரினால் பிர­தி­வா­திகள் 20 வரு­டங்­க­ளுக்கு பின்னர் அடை­யாளம் காட்­டப்­பட்­டதை மட்டும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு மரண தண்­டனை வழங்­கு­வது நியா­ய­மற்­றது என வாதிட்­டி­ருந்­தனர்.

வழக்கு விசா­ர­ணையையடுத்து சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் உரிய­வ­கையில் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்று ஜூரிகள் பரிந்­து­ரைத்­தனர். இத­னை­ய­டுத்து ஆறு இரா­ணுவ வீரர்­க­ளையும் அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மஞ்­சுள தில­க­ரட்ண விடு­தலை செய்­வ­தற்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.
குமா­ர­புரம் கிரா­மத்தில் அப்­பாவி பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் சர்­வ­தேச ரீதியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்த படு­பா­தகச் செயலில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தி­னரும் அடை­யாளம் காட்­டப்­பட்­டி­ருந்­தனர். ஆனாலும், வழக்கு விசா­ர­ணையின் போது குற்­றச்­சாட்­டுக்கள் சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நிரூ­பிக்­கப்­ப­டா­மை­யினால் இரா­ணு­வத்­தினர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். நீதி­மன்­றத்தின் தீர்ப்பை யாரும் விமர்­சிக்­கவோ அல்­லது தவறு என்று கூறுவதற்கோ எவருக்கும் உரி­மை ­கி­டை­யாது.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் மற்றும் வாதப் பிர­தி­வா­தங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து தீர்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதில் யாரும் தவறு காண­மு­டி­யாது. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால், அதற்­காக நிர­ப­ரா­தி­யொ­ருவர் தண்­டிக்­கப்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­பதை கருத்தில் கொண்டே நீதி­மன்­றங்கள் தீர்ப்­பினை வழங்­கு­வது மர­பாகும்.

தற்­போதைய நிலையில் குமா­ர­பு­ரத்தில் அப்­பாவி பொது­மக்­களை கொன்று குவித்த குற்­ற­வா­ளிகள் யார் என்ற கேள்வி எழு­கின்­றது. குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இரா­ணு­வத்­தினர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

கடந்த காலங்­களில் வடக்கு, கிழக்கில் படைத்­த­ரப்­பினால் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். மயி­லந்­த­னையில் பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். திரி­யாயில் 12 பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். கிளி­வெட்டி கிரா­மத்தில் 36 இளை­ஞர்கள் கைகள் பிணைக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இதேபோல் பெரு­வெளி கிரா­மத்தில் 1986 ஆம் ஆண்டு 46 பேர் கொல்­லப்­பட்­டனர். 2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். இதே வருடம் ஆகஸ்ட் மாதம் மூதூரில் 17 தொண்டர் நிறு­வ­னப்­ப­ணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். இவ்­வாறு படு­கொலைச் சம்­ப­வங்கள் நீண்­டு­கொண்டே செல்­கின்­றன.

இந்த படு­கொலை சம்­ப­வங்­களில் சில சம்­ப­வங்­க­ளுக்கு மட்­டுமே படைத்­த­ரப்­பினர் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஏனை­ய­வற்றில் இன்­னமும் படைத்­த­ரப்­பினர் தண்­டிக்­கப்­ப­டாத சூழ்­நி­லையே காணப்­ப­டு­கின்­றது. யாழ்ப்பாணத்தில் செம்மணிப்படுகொலை இடம்பெற்றிருந்தது.

இங்கு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அண்மையில் விசுவமடுப் பகுதியில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் 25 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்திருந்தார்.

கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கிலும் இராணு­வத்தின ருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு படைத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் பலவற்றில் சில சம்பவங்களில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டி­ருக்கின்றன.

தற்போது குமாரபுரம் படுகொலை வழக்கு விசாரணையின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய முடியும். எவ்வாறாயினும் குமாரபுரம் படுகொலைக்கு நீதியினை பெற்றுக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment