40 கிராம ஹெரோயினை உடைமையில் வைத்திருந்த மற்றும் வியாபாரம் செய்த குற்றத்திற்காக முதலாம் எதிரிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கி வவுனியா அமர்வு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இல 2532 இலக்க வழக்கின் குற்றப்பத்திரத்தின் மீது கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி அன்று வழக்கின் விளக்கம் ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை வவுனியா அமர்வு மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த வழக்கிளை நெறிப்படுத்திய வழக்கு தொடுனர் தரப்பு முதலாவது எதிரிக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டான 40 கிராம ஹெரோயிரன உடைமையில் வைத்திருந்த குற்றத்தினை அரச சட்டவாதி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நிரூபித்துள்ளதாக தெரிவித்து குறித்த முதலாம் எதிரியை குற்றவாளியாக இனங்கண்டு அவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை, குறித்த முதலாம் எதிரிக்கான முதலாவது குற்றச்சாட்டான 40 கிராம் ஹெரோயினை வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் இருந்து முதலாம் எதிரியை நீதிபதி விடுதலை செய்தார்.
இந்நிலையில் இரண்டாம் எதிரிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் வழக்கு தொடுனர் தரப்பினால் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்து இரண்டாம் எதிரியை வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.
குறித்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி குறித்த முதலாம் எதிரியான தேவதாஸ் பிறைனர், இரண்டாம் எதிரியான கந்தப்பு ஜெயபாலன் ஆகிய இருவரும் வவுனியா பஸ் நிலையப் பகுதியில் 40 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வியாபாரத்திற்கு கொண்டு வந்து உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பெயரில் முந்தல் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஒரு வருடமாக முதலாம் எதிரி சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இரண்டாம் எதிரி சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆயராகி இருந்த நிலையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிஷாந்த் நாகரட்ணம் ஆயராகி வழக்கினை நெறிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், இரண்டு எதிரிகளினாலும் செய்யப்பட்ட பிணை விண்ணப்பங்கள் அரச சட்டவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆட்சேபனையின் பிரகாரம் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு எதிரிகள் இருவரும் கடந்த 5 வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு மன்றிலே வாசித்து தெரியப்படுத்தப்பட்ட போது இந்த வழக்கில் இருந்து குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட இரண்டாம் எதிரி மன்றில் இருக்கவில்லை.
இவர் தீர்ப்பு வழங்குவதற்கு முதல் நாள் இரவு அனுராதபுரம் சிறைச்சாலையில் மாரடைப்பினால் உயிரிழந்து விட்டதாக அவரது சட்டத்தரணியால் மன்றில் தெரியப்படுத்தப்பட்டது

No comments:
Post a Comment