அரச படையினரை காட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படையினரை காவுகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால, படையினரை பழிவாங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக மஹிந்த உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார்.
அரசியல் இலாபங்களுக்காக படையினரை முன்வைத்து சிலர் பிரசாரம் செய்துவருவதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார். அதேவேளை படையினரைப் பலப்படுத்தவும், அவர்களுக்கான நலன்புரி சேவைகளை மேலும் விஸ்தரிக்கவும் தற்போதைய அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment