June 30, 2016

போரில் கொத்தணிக் குண்டுகளா ஐ.நாவில் குண்டு போட்ட – மங்கள..???

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயமாக இருக்கும் என்று, சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரச் செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும், உப மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றுப் பிற்பகல் நடந்த இந்த உப மாநாட்டில், அண்மையில் வெளியாகியுள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,

‘போரில், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம். ஆனால், கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக விசாரிப்போம்.

இறுதிக்கட்டப் போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது பாரதூரமானதாகும்.” என்று தெரிவித்தார்.

புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பாக, நம்பகமான- சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வரைவு அறிக்கையிலும், கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment