இந்திய அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து (டிஜிட்டல் காணொளி ஊடாக) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றும் விசேட யோகா நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே.சிங்ஹா, யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண ஆளுனர், உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வடமாகாணத்தின் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், மற்றும் இளையோரின் மேம்பாட்டை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தினால் 145மில்லியன் ரூபா செலவில் துரையப்பா விளையாட்டரங்கின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த செயற்றிட்டமானது இந்திய இலங்கை இடையேயான வெற்றிகரமான வளர்ச்சி கூட்டு பகுதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment