வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளின் அபிப்பிராயங்களையும், யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்தே வருகின்றது என்ற குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னாலும் குறைந்தபட்சம் தங்களது கோரிக்கைகளையும் செவிமடுக்காமல் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக நீண்டகாலம் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் வழக்கு தொடர்ச்சியாகவே ஒத்திவைக்கப்பட்டுவரும் நிலையே ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் விசேட நீதிமன்றத்தின் மூலம் எத்தனை அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வியையும் சிவசக்தி ஆனந்தன் சபையில் எழுப்பினார்.

No comments:
Post a Comment