காலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை, பாண்டிருப்பினை
சேர்ந்த தமிழ் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக யுவதியின் காதலன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யுவதியின் காதலன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த யுவதியும் மட்டக்களப்பு, பெரியகல்லாறை சேர்ந்த இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இக்காதலுக்கு யுவதியின் பெற்றோர் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், பின்னர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த யுவதியை பெற்றோர் சித்திரவதை செய்து வந்துள்ளதாகவும், அது தொடர்பிலான குறுஞ்செய்திகளை தனக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் யுவதியின் காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுவதி மரணிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தன்னுடன் குறித்த யுவதி உரையாடியதாகவும் அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
குளித்து விட்டு வந்து கதைப்பதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தின் பின்னர், தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் குறித்த யுவதியின் சகோதரியொருவர் ஏதோ சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறுஞ்செய்திகளை சேகரித்துள்ள காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த யுவதியின் உயிரிழப்பிற்கு காதலனின் அழுத்தம் காரணம் என பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment