June 29, 2016

வல்வெட்டித்துறை பொலிஸாரால் நற்குணம் நிசாந்தன் அபாயகரமாக தாக்கப்பட்டார்!

வல்வெட்டித்துறை காவல் நிலைய காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் அபாயகரமான நிலையினில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் பாடசாலை வீதி இமையாணன் உடுப்பிட்டியைச் சேர்ந்த நற்குணம் நிசாந்தன் (வயது 22) என்பவராவார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு முன்னால் நின்ற இளைஞனை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து அழைத்துச் சென்று மாலை 6 மணிவரையில் காவல்நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இளைஞனின் தலை, கன்னம் ஆகிய பகுதிகளில் காயமேற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் வீடு வந்து சேர்ந்த இளைஞர் தலைசுற்று, மயக்கம் காரணமாக அன்று இரவு 10.30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மேலதிக பரிசோதனைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவவிளைஞன் ஏற்கெனவே காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையினில்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment