ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் தமிழ் ஊடகத்துறையினருடன் நெருங்கிய உறவுகளை கொண்ட
ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே, நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இனந்தெரியாத இரண்டு நபர்கள், தடிகளால் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘செய்தி சேகரித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்ட போது பின்னால் வந்த நபர்கள் தன்மீது தடியடி தாக்குதல் நடத்தினார்கள் என தாக்குதலுக்கு உள்ளான ப்ரெடி கமகே தெரிவித்தார். தாக்குதலையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றள்ளார்.
கடந்த ஆட்சி மாற்றத்தில் சிவில் சமூகம் சார்பில் பெரும்பங்கை இவர் ஆற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment