இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லையென அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில்,
அதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிரூபிக்க முடியுமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையெனவும், சிலர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மாவை சேனாதிராஜா மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”இலங்கை அரசாங்கமும் இணைந்தே ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்றை கொண்டுவந்தது.
ஆனால் இதில் குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் எதனையும் உருப்படியாக நிறைவேற்றவில்லை. இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் முதலில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அதனை விடுத்து, ஐ.நா அறிக்கையிலோ தருஸ்மன் அறிக்கையிலோ, இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று குறிப்பிடப்படவில்லை என, அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இறுதி யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை வெளியிடவேண்டும். அத்தோடு, ஊடகங்களை அழைத்து அறிக்கைகளை வெளியிடாது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும்.
இம் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரது வாய் மொழி மூலமான அறிக்கையிடலுக்கு முன்பு, குறித்த விடயங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவேண்டும்.
மேலும், நாட்டில் 1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும்.
வடக்கில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மீள்குடியேற்ற நடவடிக்கையை உண்மைக்கு மாறாக திணிப்பதற்கு இடமளிக்கக்கூடாது.
உண்மைகளை அறிந்து அந்தக் குடும்பங்களை மீள்குடியமர்த்தவேண்டும்” என்றார்.

No comments:
Post a Comment