May 22, 2016

யேர்மனி பேர்லின் நகரில் தொடரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்திய நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்தி நேற்றைய தினம் யேர்மனி , பேர்லின் நகரில் தமிழ் பெண்கள் அமைப்பினரால் ஐந்தாவது தடவையாக "முள்ளிவாய்க்கால் முற்றம்" எனும் சிறுவர்களின் ஆக்கங்களை கொண்ட இதழ்
வெளியிடப்பட்டுள்ளது. இவ் இதழில் எமது தேசியத்தையும் , மொழியையும் , போராட்டத்தையும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எடுத்துரைக்கும் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ஓவியங்கள் சிறுவர்களால் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பு நாள் நினைவாக நான்கு வருடங்களுக்கு முன்னராக பேர்லின் நகரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் நடப்பட்ட அப்பில் மரத்தை தமிழ் உறவுகள் பார்வையிட்டனர். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் செய்தியை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இம் மரம் அன்றைய நாட்களில் நடப்பட்டது. அங்கு ஒன்றுகூடிய உறவுகள் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

















No comments:

Post a Comment