May 28, 2016

இலங்கை அகதியை நாடுகடத்த அவுஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவு!

படகு மூலம் கடந்த 2012ம் ஆண்டில் அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய மத்திய நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இலங்கை திரும்பினால் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறித்த போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 
இலங்கை இராணுவத்தினரால் தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து தாம் அவுஸ்ரேலியா வந்ததாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார். தம்மையும் தமது குடும்ப உறுப்பினர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பிடித்து தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த குறித்த நபர் தமிழர் என்ற இன அடிப்படையில் புகலிடம் கோரியுள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment