இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்றும் அமெரிக்கப் பிரேரணை வலுவானதாக அமைய வேண்டுமென்று வலியுறுத்தியும்
புலம்பெயர் மக்கள் ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் 30,09,2015 பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி னர்.
2 மணிமுதல் 5 மணிவரை ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொன்டனர். சர்வதேசத்தினாலும், அமெரிக்காவினாலும் இலங்கைத் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற முடியாது என்றும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படது.
கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜெனிவாவில் தங்கியுள்ள புலம் பெயர் தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையிலேயே புலம் பெயர் தமிழ் மக்களின்இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமும் இடம் பெற்றது.
No comments:
Post a Comment