October 1, 2015

பாலச்சந்திரனின் பிறந்தநாள் இன்றாகும்!

பிள்ளைநிலாவே…

வலிகளையே வார்த்தையாய் கோர்த்து

உனக்கோர் கவிதை வரைகின்றோம்-எங்கள்


வல்லபுலியின் பிள்ளை உனைநினைந்து

வார்த்தைகளின்றி தவிக்கின்றோம்…!

அடிக்கடி இரவில் தூக்கத்தில் விழித்து

அலறியடித்து எழுகின்றோம்-இந்தப்

படத்தைப் பார்த்த நாள் முதலாய்

பைத்தியம் போலே திரிகின்றோம்…!

உந்தன் படத்தைப் பார்த்திட்ட பின்பும்

உலகில் மனங்கள் திருந்தலையா அந்தச்

சிங்களம் செய்கையை அறிந்திட்ட பின்பும்

சிறையிட எவருமே விரும்பலையா…?

தலைசாய்த்து சிரிக்கும் பிள்ளைநிலாவினை

இவர் சாய்த்துப்போனார் கொடுமை ஐயோ…

உனை சாய்த்துப்போன சிங்களக்கூட்டத்தை

நாம் சாய்த்து வெல்லுதல் கடமையெல்லோ…!

விழிகளே பழுதாய் ஆனவிவ்வுலகில்

எமக்கென்றும் நீதி கிடையாது…!

பலிகளை மறந்து வாழெனச்சொல்ல

எவருக்குமே உரிமை கிடையாது…!

வழிகளை மாற்றி,வலிமையைக்கூட்டி

மீண்டுமோர் சரிதம் எழுதிடுவோம்

உனை பலியிட்ட பகைவன் தலையினை கொய்து

விலங்குகளிற்கொரு விருந்து வைப்போம்.

-ஆத்மார்த்தன்-



பாலாக்குட்டிக்கு  இன்று பிறந்தநாள்

ஈழக்குழந்தை பாலாக்குட்டிக்கு

இன்று பிறந்தநாள்

அந்த பாலகன்

அன்பு முகம் காண

தமிழர்கள் நெஞ்சங்கள் ஏங்கும்படி

தவிக்க வைத்த வெறிப்பிடித்த

ஈனப்பிறப்புக்களே..

மனிதத் தன்மை செத்துப்போன

மானங்கெட்ட இலங்கை இராணுவத்திற்கு

உலகம் விளக்கு பிடித்து

உண்மைகளை மறைக்கிறது

உண்மைகளும் வெளிச்சமாகும்

என்றிடும்-பல ஏக்கங்களுடன்

இத்தரணிதனில்

தமிழர்கள் நாம் பயணிக்கிறோம்

ஈழக்கனவுகளுடன்…

பொன்-தீந்தமிழ்.

No comments:

Post a Comment