October 1, 2015

சாவகச்சேரியில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை.!

சாவகச்சேரியில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். சாவகச்சேரி- சங்கத்தானை- சப்பச்சிமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்தnew-Gif1 வயோதிபர் ஒருவரே தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.
மீசாலை வடக்கு, மீசாலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 63 வயதான சின்னையா நவசிவாயம் என்ற வயோதிபரே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாகவும் ஆனால் தற்கொலை செய்தமைக்கான காரணம் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment