October 11, 2015

வியாபார நோக்கம் கொண்ட வர்த்தகர்களுக்கு பணம் மீது மட்டுமே குறி! ஜனாதிபதி!

வியாபார நோக்கம் கொண்ட வர்த்தகர்கள் பணத்தை குறித்து மட்டும் எண்ணி செயற்படுவதாகவும் அவர்கள் நாடு மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றி எண்ணி செயற்படுவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை அழிக்கும் அப்படியான நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

கொத்தமலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அடுத்த மூன்று வருடங்களில் இலங்கையில் உள்ள வாகன பரப்பை 29 வீதத்தில் இருந்து 32 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு. யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே வனங்கள் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment