October 2, 2015

எங்கே செல்கின்றது இளம் சமூகம்! யாழில் நடிகனிற்கு பாலூற்றும் சமூகம்! (படங்கள் இணைப்பு)

யாழ்.குடாநாட்டின் திரையரங்குகளில் இன்றைய தினம் விஜய் நடிப்பில் வெளியான புலி படம் திரையிடப்பட்ட போது அடாவடியில் இளைஞர்கள் சிலர் இன்றைய தினம் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள்
எழுந்துள்ளன.
பல இளைஞர்கள் மதுபோதையில் நின்று வீதி போக்குவரத்தை தடை செய்திருந்த போது பொதுமக்களினால் வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவாகியிருந்தது. பின்னர் நண்பகல் 12.30மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் இளைஞர்கள் நடிகர் விஜய் படத்திற்கு பெருமளவு பால் ஊற்றி வெடிகளை கொழுத்தி அட்டகாசம் புரிந்தனர்.
குடாநாட்டில் மக்களுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியதுடன் இளைஞர்களின் போக்கு சீற்றத்தையும் தோற்றுவித்திருந்தது.







No comments:

Post a Comment