October 2, 2015

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் பாவனைக்குதவாத கோதுமை மாவை தொழிலாளர்களுக்கு வழங்கிய தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிற்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கோதுமை மா பக்கட் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுவதாகவும் குறித்த பக்கட்டின் மேற்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரத்தில் காலாவதியான திகதி காணப்படுவதாகவும் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து இது தொடர்பாக தொழிலாளர்கள் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் காரியலாயத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதன்பின் தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நுவரெலியா பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோதுமை மாவை பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
எனினும் தொழிலாளர்கள் மாலை வரை தமது ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment