October 2, 2015

தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு பிரிட்டனே பொறுப்புக்கூறவேண்டும்!- அனந்தி!

இலங்கையில் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு பிரிட்டனே பொறுப்புக் கூறவேண்டும். அன்று இலங்கையில் பிரிட்டன் செய்த தவறை இன்று அமெரிக்கா செய்வதற்கு முயற்சிக்கின்றது என்று ஜெனிவா
மனித உரிமை பேரவையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அனந்தி சசிதரன் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை குறித்து கொண்டுள்ள கரிசனைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பிரிட்டனே பதில் கூறவேண்டும்.தந்தை செல்வா அன்று சமஷ்டிக்கு மேலதிகமான தீர்வைக் கோரினார். அந்தளவுக்கு அன்று நிலைமை காணப்பட்டது. ஆனால் பின்னர் இனப்படுகொலை இடம்பெற்றது. இன்று சமஷ்டிக்கு குறைந்த தீர்வையே பெற முடியாமல் உள்ளது.
இதற்கு பிரிட்டன் செயற்பட்ட விதமே காரணம். அன்று உரிய முறையில் பிரிட்டன் செயற்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.இதேவேளை அன்று பிரிட்டன் செய்த அதே தவறை இன்று அமெரிக்கா செய்ய முற்படுகின்றது. இது கவலைக்குரிய விடயம். எமது நிலைமையை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment