October 11, 2015

பருத்தித்துறையில் பண்பாட்டுப் பெருவிழா! : மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு(படங்கள் இணைப்பு)

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது.வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய
யாழ்.பண்பாட்டு பெருவிழா நேற்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமானது.
யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் இ.ரவீநர்திரனும் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி கலந்து கொண்டார். சர்வமத தலைவர்களின் ஆசி உரைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நாட்டார் பாடல்கள், கிராமிய நடனம், தென்மோடி கூத்து போன்ற பண்பாட்டு கலைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் இந் நிகழ்வில் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.




No comments:

Post a Comment