October 11, 2015

கோப்பாய் பொலிஸாரின் அசமந்தம்; நீதி கேட்டு மரணவிசாரணை அதிகாரி வீட்டுக்கு மக்கள் படையெடுப்பு!

கோப்பாய் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி வீட்டுக்கு பொது மக்கள் நீதி கேட்டு சென்றனர்.கடந்த முதலாம் திகதி திருநெல்வேலி சந்தையில் இருந்து வீடு திரும்ப முற்பட்ட கோண்டாவில் வடக்கு
அன்னுங்கை வீர பத்திரர் கோவிலடியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான சண்முகம் கமலா என்பவர் மோட்டார் சைக்கிளால் மோதுண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் மரணமானார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்ப்பட்டது.

இந்த நிலையில் குறிப்பிட்ட பெண் மரணமடைந்துள்ள நிலையிலும் அவரின் மரணத்துக்குக் காரணமான இளைஞனை கோப்பாய் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லையெனக் கூறி நீதி கேட்டு மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

வீட்டுக்கு பொது மக்கள் வந்து நீதி கேட்ட சம்பவத்தை மரண விசாரணை அதிகாரியும் உறுதிப்படுத்தினார். கோப்பாய் பொலிஸாரின் இத்தகைய அசமந்தமான செயற்பாட்டை பொது மக்கள் மத்தியில் கேட்க யாரும் இல்லை என்றால் பொலிஸார் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கமாட்டார்களா என்று அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment