இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, மே 17 இயக்கத்தால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ம் திகதி இடம்பெற்ற இம்முற்றுகைப் போராட்டத்தில் இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் பொழிலன் மற்றும் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அருணபாரதி மற்றும் தோழர்கள், தமிழர் விடுதலை கழகத்தின் சுந்தரமூர்த்தி மற்றும் தோழர்கள், தமிழர் விடியல் கட்சியின் பாபு மற்றும் தோழர்கள், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் சிவகாளிதாசன் மற்றும் தோழர்கள், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தோழர் முகிலன், தோழர் திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது அமெரிக்காவின் கொடி தீயிட்டு எரிக்கப்பட்டது. அமெரிக்கப் பொருட்களான கே.எப்.சி (KFC), பெப்சி, கோலா போன்றவற்றை புறக்கணிக்க வலியுறுத்தப்பட்டது.
பெப்சி, கொகொ கோலா நிறுவனங்களின் பொருட்களை உடைத்து தோழர்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
“அயோக்கிய அமெரிக்காவே தமிழீழத்தை விட்டு வெளியேறு. திருகோணமலை தமிழர் நிலம். நமது கடல் தமிழர் கடல். ஏகாதிபத்தியங்களுக்கு இடமில்லை.
தமிழீழ விடுதலையை அழிக்கும் அமெரிக்காவின் மீது பொருளாதாரப் போர் தொடுப்போம்.
அமெரிக்க-இந்திய-மேற்குலகின் கூட்டுச் சதியினை முறியடிப்போம்.
தமிழீழ இனப்படுகொலைக்கு துணைபுரிந்த அமெரிக்க-இந்திய-இங்கிலாந்து அதிகாரிகள் மீதும் சர்வதேச விசாரணை வேண்டும்.
தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் இனப்படுகொலை. இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணயே தேவை. உள்நாட்டு விசாரணையோ, கலப்பு பொறிமுறையோ அல்ல.
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புமே நமது கோரிக்கை. தமிழீழ விடுதலையே ஒரே தீர்வு”
போன்ற கோசங்களை இப்போராட்டத்தின்போது எழுப்பினர்.
No comments:
Post a Comment