யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களை துன்புறத்தி வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்கள் ஒரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் இதற்காக
யாழ்.நீதிவான் நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீநிக ஜெயக்கொடி நேற்று தெரிவித்தார்.
யாழ்.நீதிவான் நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீநிக ஜெயக்கொடி நேற்று தெரிவித்தார்.
மேலும் வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரும் தம்மைப் பணித்துள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை மோதல் இடம்பெற்றது.
கனிஸ்ட பிரிவு மாணவர்கள் இடுப்பு பட்டி அணிந்து வருகின்றமை, மற்றும் சிரேஸ்ட மாணவர்களை மதிக்காது மரங்களின் கீழ் உள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றமை தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியது.
இதில் சிரேஸ்ட மாணவர்கள் கனிஸ்ட மாணவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலர் தரக்குறைவாக பேசியதுடன், மாணவர்களின் விடயத்தில் தலையிடவேண்டாம் என கூறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்பித்திருந்தார்.
இதனையடுத்து வீதியில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டமை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
குழு மோதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் கைது செய்யுமாறு நீதவான் பொ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீநிக ஜெயக்கொடி தெரிவித்தார்.
அதேபோல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறின்றி மோதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரும் பணித்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கு பல்கலைகழக நிர்வகாகம் ஒத்துழைத்து வழங்கவேண்டும். பொலிஸாருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதனை தவிர்துக்கொள்ள வேண்டும் எனவும் பொறுப்பதிகாரி பல்கலைகழக் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் வீடியோக்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment