September 18, 2015

ஐ.நா.சபையின் விசாரணை அறிக்கையின்படி உண்மைகள் அறியப்பட வேண்டும்: சம்பந்தன்!

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையின் படி உண்மைகள் அறியப்பட வேண்டும். அத்துடன் உண்மை அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நிலாவெளி,  பெரியகுளம் கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா இன்றையதினம் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினகராக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவர இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி திருகோணமலை கல்வி வலய வலயக்கல்வி பணிப்பாளர் என். விஜேந்திரன் மற்றும் நிலாவெளி பிரதேச பாடசாலை அதிபர்கள் ஆசிரியர் மாணவ மாணவியர், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் சகல மக்களும் ஒன்றிணைவதன் மூலம் எமது நியாயங்களை வெளிக்கொண்டுவர முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையின் படி உண்மைகள் அறியப்பட வேண்டும். அத்துடன் உண்மை அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.
இதுவரை நடைபெற்ற குற்றங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது என அறிக்கையில் கூறப்பட்டள்ளது. அவ்வாறெனில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு அவசியம்.
நியாயமான அரசியல் தீர்வினை அடைய நாட்டிலுள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
சர்வதேச விசாரணை அறிக்கையை எல்லோரும் நிலை நாட்ட வேண்டும்.
நாட்டு மக்களின் நன்மையை மட்டும் கருதி ஏனைய கட்சிகள் செயற்பட வேண்டும் என்றார்.
மேலும் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு காரணமாக மக்கள் தற்போதய நிலையை அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மேற்பார்வையில் சர்வதேச சமூகத்தின் கங்களிப்பு தொடர வேண்டுமெனவும்’அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் சமத்துவம் பேணப்பட வேண்டும். தாம் புரட்சிகரமாக எதையும் கூறவில்லை.
யுத்தத்தின் காரணமாக நட்டின் கல்வி பின்னடைவில் உள்ளது.
இந்த நிலைமை மாறவேண்டுமெனவும் அதிகார பகிர்வின் மூலம் காணாமல் போனோர், சிறையிலடைக்கப்பட்டோர் மற்றும் மக்களது காணிப்பிரச்சினைகள் விதவைகளது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட வெண்டுமென தெரிவித்தார்.


No comments:

Post a Comment