உள்ளூர் விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் இன்று மூன்றாம் நாள் இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் யத்த
குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடை பயணம் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பு ஏ9 வீதியில் ஆரம்பமாகிய தொடர்ந்து இன்று 3 ஆம் நாள் பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை ஆனைறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவு செய்யப்பட்டது.இன்று காலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டது.இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்டோரும் பலர் பங்கெடுத்திருந்தனர்.
சிவாஜிலிங்கம் கருத்து.
ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய மூன்றாம் நாள் பயணம் பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றய நடை பயணத்தின் முடிவு கொடிகாமம் பகுதி என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அனந்தி சசிதரன் கருத்து.
தமது மூன்றாம் நாள் பயணம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தம்முடன் அரசியல் கைதிகள் மற்றும் கோணாமல் போனோரின் உறவுகளும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தம்முடன் இணைந்துள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் நாளுக்கு நாள் புதியவர்கள் தமது பயணத்தில் இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்ட அவர் தமது பயணத்தின் போது மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வருதாகக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment