வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எந்தவிதமான அடிப்படைவசதிகளுமற்ற நிலையில் தற்காலிக கூடாரங்களில் பெரும் அசௌகரியங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமம் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 1994 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இந்த கிராம மக்கள் போரால் இடம்பெயர்ந்தனர்.
இந்தப் பகுதி கடந்த இருபது வருடமாக யுத்தப் பிராந்தியமாக காணப்படும் நிலையில் கிராமத்து மக்கள் பெரும் சொத்திழப்புக்களுக்கும் அலைச்சலுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
2009ஆம் ஆண்டினல் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும் இதுவரையில் தற்காலிக கூடாரங்களிலேயே தமது நாட்களை கழித்து வருகின்றனர் மக்கள்.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள பலருக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட போதும் தமக்கு இதுவரையில் வீடுகள் அமைத்துத் தரப்படவில்லை என்றும் மக்கள் அங்கலாக்கின்றனர்.
மலசல வசதிகள் போன்ற அடிப்படைவவசதிகள்கூட இல்லாமல் தாம் அன்றாட வாழ்வை கழித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஓமந்தை பகுதி மக்கள்.
விரைவில் தமக்கான வீடுகளை அமைத்து தருவதுடன் தமக்கான அடிப்படை வசதிகளையும் உரிய தரப்பினர் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஓமந்தை கிரா மக்கள் கோருகின்றனர்.
No comments:
Post a Comment