இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது உள்பட போர்க்குற்றங்கள் நடந்தது. இது குறித்து ஐக்கிய நாடுகள் அவை விசாரித்தது. இதன் அறிக்கையை இன்று ஐநா மனித உரிமை ஆணையர் ராத் அல் உசைன் வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* போரில் போது இருதரப்பும் ஏராளமான பொதுமக்களை கொன்றன.
* இலங்கையில் போர் காலத்தில் ஏராளமானவர்கள் மாயமாகியுள்ளனர்.
*போரில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களை பாரட்டுகிறேன்.
*அறிக்கையில் தாக்குதல் ஆட்கடத்தல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
*ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
*அறிக்கையில் ஆயிரக்கணக்கான மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
*போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும்.
*தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
*போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம்.
*எனவே போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது அவசியமாகிறது.
*இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு என இருதரப்புமே போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளன
*இலங்கையின் நீதித்துறை போர்குற்றம் குறித்து இதுவரை விசாரிக்கவில்லை.* இலங்கையின் தற்போதைய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
*இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை
*போர்குற்றம் குறித்து உள்நாட்டு நீதிமன்ற விசாரணை உகந்தது அல்ல
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment