இன்று காலை 8மணியளவில் சில்ரிகைம்; என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம், அந் நகர நகரபிதாவைச் சந்தித்து, மனு கையளிக்கப்பட்டதுடன், அவருடன் தொடர்ந்து உரையாடுகையில் அவர்
கூறியதாவது பிரான்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடம் தானும் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து ஸ்ராஸ்பூர்க் நகரின் வெளிநாட்டு வெளிவிவிகார பிரதிநிதி அவர்களைச் சந்தித்து மனு கையளிக்கப்பட்டதுடன், அவருடன் கலந்து உரையாடியும் இருந்தனர்.
தொடர்ந்து ஈருருளிப் பயணம், ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் ஆகிய பகுதிகளைக் கடந்து, பி.பகல் 3மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை வந்தடைந்தது. அங்கு கவனயீர்ப்பை மேற்கொண்டிருந்த மக்கள், மனித நேய ஈருருளிப் பயணத்தை தொடர்ந்து வருபவர்களை உற்சாகமாக வரவேற்றதுடன், அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் பிரதிநிதியிடம் 5அம்சக் கோரிக்கைகள் கொண்ட மனு கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களும், மனித நேய ஈருருளிப் பயணத்தை மேற்கொள்பவர்களும் இணைந்து ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்;ள ஐரோப்பிய நாட்டுத் துணைத்தூதரகங்களை ஊடறுத்து ஐரோப்பிய ஆலோசனை சபை வரை பேரணியும் நடாத்தியிருந்தனர்.
ஐரோப்பிய ஆலோசனை சபையின் வெளிவிவகார ஆணைக்குழுப் பொறுப்பாளரிடம் மனு கையளிக்கப்பட்டதுடன், பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர் அர்னோல்ட் யுங் அவர்களிடமும் மனு கையளிக்கப்பட்டது.
இவ் வேளை பிரான்ஸ் நாட்டின் பத்திரிகைகளும் இவ் ஈருருளிப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடு;த்து செய்தி பிரசுரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையிலும் இன்றைய தினம் 25 கி.மீ மட்டுமே பயணித்து இல்கிறிச் என்னும் இடத்தில் நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் நாளைக் காலை ஈருருளிப் பயணம் ஆரம்பமாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
No comments:
Post a Comment