முல்லைத்தீவு சுதந்திரபுர அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களினால் அதிபரை இடமாற்றம் தொடர்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 7.00 மணியிலிருந்து பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர்இணைந்து பாடசாலை வழாகத்திற்கு செல்லவிடாது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் குற்றச்சாட்டின் பெயரில் ஈடுபட்டடு பணி நீக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட அதிபரை இப் பாடசாலைக்கு நியமித்ததைக்கண்டித்தும் மாணவர்களினாலும் பெற்றோர்களினாலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விடயம் தொடர்பாக முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிமனையின் அதிகாரிகள் அவ்விடத்துக்குச் சென்று மாணவர்களுடன் நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப்பிறகு அதிபரை இட மாற்றப்படமாட்டது என உறுதியளித்த பின் மாணவர்களினால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment