இன்று இடம்பெற்ற யாழ் நல்லூர் முருகனின் தேர்த்திருவிழாவில் நகைத்திருட்டில் ஈடுபட்ட நான்கு பெண்களை யாழ் பிராந்திய பொலிசார் கைது செய்துள்ளனர்.
தேர்த்திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை குறித்த பெண்கள் பக்தர்களோடு பக்தர்களாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துவிட்டு தப்பியோடமுற்பட்டவேளை அருகிலிருந்த பொலிசாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுடன் தொடர்புடைய மேலும் மூன்று பெண்களும் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் திருவிழாவிற்கென யாழ் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சுமார் 800 பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
No comments:
Post a Comment