September 11, 2015

மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன கொழும்பு நோக்கிய பாதைகள்!

பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக கொழும்பை நோக்கிய பெரும்பாலான பாதைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக பத்தரமுல்லையிலிருந்து பொரளையை (கொழும்பு 08) நோக்கிய பாதை அதிகளவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெய்து வரும் மழை சில நாட்களுக்கு தொடரும் என தெரிவித்துள்ள காலநில அவதான நிலையம் மேல்மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எச்சரித்துள்ளதோடு கேகாலை மாவட்டத்திலும் இந்நிலை காணப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் வடமேல் மாகாணம். தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இடைக்கிடை இம்மழை பெய்யும் என தெரிவித்துள்து.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில், பிற்பகல் 4.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் இவ்வேளைகளில் நாட்டின் கடற்கரைப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோமீற்றராக இருக்கும் என காலநிலை அவதான நிலைய அதிகாரி சிறிமல் ஹேரத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment