வடமராட்சி பகுதியில் இளம்பெண்ணொருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். அது பற்றிய மேலதிக செய்திகள் வெளியாகியுள்ளன.வடமராட்சி
வல்வைபகுதிக்கு நெருக்கமான இமையாணன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தப்பெண் கனடாவிலிருந்து திருமணத்திற்காக வந்திருந்தார். சிறுப்பிட்டியிலுள்ள
வாலிபருடன் நாளை வியாழக்கிழமை திருமணம் நடக்கவிருந்த சமயத்திலேயே இந்த கடத்தல்
நடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முகத்தை கறுப்புத்துணியால் மூடிக்கட்டிக்கொண்டு வந்த
மர்மநபர்கள் வீட்டுக்கதவை அடித்து உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளனர். இவர்களை கண்டு கனடா
யுவதி அலறியுள்ளார். எனினும், துணை யுவதியின் வாய்க்குள் அடைத்து, அவரை தூக்கி
வாகனத்திற்குள் ஏற்றிக் கொண்டு பறந்துள்ளனர். பிரதேச வாலிபர்கள் வாகனத்தை துரத்திச்
சென்றபோதும், உடுப்பிட்டி பகுதியால் சென்று வரணிப்பக்கமாக தப்பிச் சென்றுவிட்டது.
இது பழைய காதல் விவகாரத்தால் நடந்தது என பிரதேசவாசிகள் பேசிக்கொள்கிறார்கள்.

No comments:
Post a Comment