September 16, 2015

த.தே.கூட்டமைப்புக்கு 3 மாவட்டங்களின்அபிவிருத்திக் குழு தலைவர் பதவி!

மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களின்
அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியற் கட்சிக்கு அவர்கள் வெற்றி பெற்ற மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பதவி வழங்க அரசு தீர்மானித்தது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 மாவட்டங்களும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 மாவட்டங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 3 மாவட்டங்களிலும் அபிவிருத்திக் குழுக்களின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சிகளினால் பரிந்துரை செய்யப்படும் வரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக ஜனாதிபதி, மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிப்பார்.
இதே வேளை , மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் தினம் தொடர்பில் ஏழு நாட்களுக்குள் தனக்கு அறிவிக்குமாறு , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக குறித்த உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment