September 2, 2015

முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட கணவர்; நிர்க்கதியான மனைவி! திடுக்கிடும் தகவல்!

முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட கணவனை பறிகொடுத்து நிர்க்கதியான நிலையில் வாடும் தாய் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார்.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண யுத்த சூழ்நிலை காரணமான கடந்த 2008ம்
ஆண்டு மே மாதம் 19ம் திகதி வவுனியா மகா ரம்பைக்குளம் பிரதான வீதியில் இனம் தெரியாதவர்கள் முச்சக்கரவண்டியில் எனது கணனைக் கடத்திச் சென்றனர்.
எனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி.சிவானந்தன் வினிதா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாவியில் இருந்து, பின் வவுனியாவில் வசித்து வருகிறோம்.
இங்கு குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வவுனியா மகா ரம்பைக்குளம் பிரதான வீதியில் இனம் தெரியாதவர்கள் முச்சக்கரவண்டியில் எனது கணவனை கடத்தி சென்ற நிலையில் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
எனது கணவர் கடத்தி செல்லபட்ட பின் தொலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்திய சிலர், எனது கணவரை விடுதலை செய்வதற்கு ஐந்தரை லட்சம் கம்பம் கோரி அதனை பெற்றுகொண்டனர்.
கணவனை விடுதலை செய்வதாகவே பணம் பெற்றனர். ஆனால் இவர் இன்றுவரை வீடுதிருவும் இல்லை வாங்கிய பணத்திற்கு என்ன நடந்தது எனவும் தெரியாது.
எனவே இது தொடர்பாக பொலிஸ் நிலையம் உட்பட அனைத்து மனித உரிமைகள் அமைப்புகளிடமும் முறைப்பாடுகள் செய்திருந்தேன். ஆனாலும் எந்த ஒரு முடிவும் எனக்கு கிடைக்கபெறவில்லை.
கடைசியாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்தபோது எனது கணவருக்கு என்ன நடந்தது தொடர்பாக விபரமாக கூறினேன்.
ஆனால் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு பின் எந்த ஒரு தீர்வும் எனக்கு கிடைக்கவில்லை. ஆணைக்குழு முன் சாட்சியம் அழித்ததால் இந்த நாட்டில் பலத்த அச்சறுத்தல்கள் மத்தியில் பாதுகாப்பற்ற முறையிலேயே வாழ்ந்து வருகிறேன்.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் ஆணைக்குழுவின் செய்பாடுகள் அடிப்படையில் எந்த பலனும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
ஆகவே இந்த நாட்டில் எங்களது பாதுகாப்பு கேள்விகுறியாகவே காணப்படுகிறது. இதை யாரிடம் முறையிடவது என்று கூட தெரியவில்லை.
எங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் மிகவும் கஸ்டப்படுகின்றோம். எனவே எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்.
இதுவரையில் இலங்கையில் நடந்த உள்ளக விசாரணைகளில் தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இனிவரும் காலங்களிலும் உள்ள விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே சர்வதேச விசாரணை இந்நாட்டிற்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

No comments:

Post a Comment